கடந்த அரசாங்கத்தினால் பறிக்கப்பட்ட இராணுவ நிலைகள் மற்றும் அனைத்து சிவில் உரிமைகளையும் சரத் பொன்சேகாவுக்கு மீள வழங்க உத்தரவிட்டுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
அரசியலமைப்பின் 34வது சரத்துக்கேற்ப சரத் பொன்சேகா மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றங்களுக்கும் ஜனாதிபதியினால் மன்னிப்பு வழங்கப்பட்டதன் அடிப்படையில் அவருக்குரிய உரிமைகள் யாவும் மீள வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2010 ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்டுத் தோல்வியுற்ற பின் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இராணுவ நீதிமன்ற விசாரணையும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையிலேயே தேர்தல் பிரச்சாரத்தின் போது வழங்கிய வாக்குறுதிக்கமைய ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த சரத் பொன்சேகாவின் கட்டளைக்கமையவே யாழில் பல இளைஞர்கள் இனம்தெரியாதவர்கள் என்ற போர்வையில் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Social Buttons