Latest News

January 21, 2015

மஹிந்த ஆதரவாளர்களை விரட்டியடிக்கும் மைத்திரி அரசு.....
by Unknown - 0

பிரதம நீதியரசர் விரைவில் இராஜினாமா

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் மிக விரைவில் தனது பதவியை இராஜினாமா செய்வார் என அரசு நம்பிக்கை கொண்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன புதன்கிழமை (21) தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் மொஹான் பீரிஸ் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து, இராஜினாமா செய்வதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

பாலபட்டபெந்தி விரைவில் பதவி விலகுவார்!

லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவர் ஜெகத் பாலபட்டபெந்தி தமது பதவியை விட்டு விலகவுள்ளார் அவர் எதிர்வரும் தினங்களில் பதவி விலகுவார் என்று கொழும்பின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளரான அவரை பதவி விலகுமாறு கோரி ஏற்கனவே அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.

கட்டுநாயக்க விமான நிலைய வர்த்தக நிலையங்களின் அனுமதிப்பத்திரங்கள் ரத்து!

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களில் இதுவரை காலமும் இயங்கி வந்த தீர்வையற்ற அனைத்து வர்த்தக நிலையங்களின் அனுமதிப்பத்திரங்களை உடனடியாக ரத்துச்செய்யுமாறு சிவில் விமான சேவைகள் ராஜாங்க பைசல் முஸ்தபா நேற்று பணிப்புரை விடுத்துள்ளார்.

தனது அமைச்சின் அதிகாரிகளுடன் நடத்திய கூட்டத்தின் போதே அமைச்சர் மேற்படி பணிப்புரையை விடுத்துள்ளார்.தற்சமயம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தீர்வையற்ற 56 வர்த்தக நிலையங்கள் உள்ளன. 

இவற்றுக்கு கேள்விக்கோரல் மூலம் முறையான முறையில் மீண்டும் அனுமதி பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் அதிகாரிகளை பணித்தா.


இவை அனைத்தையும் நோக்கும் போது, இது எல்லாமே ஒரு அரசியல் பழிவாங்கலாகவே கருதப்படுகிறது .

« PREV
NEXT »