தமிழ் மக்களுக்கு அவர்களுடைய அரசியல் அபிலாசைகள் தீர்க்கப்படாமல் கூட்டமைப்பானது மத்திய அரசில் அங்கம் வகித்து பேரினவாத அரசுடன் இணைந்து அமைச்சப்பொறுப்பை ஏற்குமாயின் தமிழ் மக்களின் இன்றுவரையான விடுதலை போராட்டத்தையும் அந்த போராட்டத்தில் தங்களை ஆகுதியாக்கிய மாவீரர்களையும் கொச்சப்படுத்துவதாகவே அமையும். புதிய ஜனாதிபதியின் கீழ் புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்க உள்ளது இதில் முன்னாள் அமைச்சர்களும் புதிய அமைச்சர்களும் அடங்குவார்கள்.
இந்த அமைச்சரவையில் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கும் அமைச்சுப்பதவிகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதை கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டார்கள் என்றால் இலங்கையில் தமிழர்களின் போராட்டம் மழுங்கடிக்கப்படுவதுடன் இதுவரை இழந்த இழப்புகளுக்கு அர்த்தமற்றதாகிவிடும்.
ஆகவே தமிழ்தேசிய கூட்டமைப்பு நல்ல தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டும் இதுவே தமிழ் மக்களது வேண்டுகையாக இருக்கும்.
கவிநிலவன்
No comments
Post a Comment