அவர் அந்த சக்தியை பயன்படுத்தி ஐக்கியப்பட்ட வளமான - ஸ்திரத்தன்மை வாய்ந்த நாட்டை தலைமை தாங்குவதற்கு நான் வாழ்த்துகிறேன். அமைதியான, ஜனநாயகத் தேர்தல் என்பது அதில் தொடர்புபட்டுள்ள அனைத்து இலங்கையர்களினதும் பெருமைக்குரிய விடயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மக்களின் முடிவை ஏற்று அமைதியான ஆட்சி மாற்றத்திற்கு இணங்கியமையையும் நான் வரவேற்கிறேன். இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல் குறித்து ஐ.நாவின் மனித உரிமை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளுக்கு ஒத்துழைக்குமாறு புதிய ஜனாதிபதியை நான் கேட்டுக்கொள்கிறேன்.
இதன் மூலம் கடந்த கால விவகாரங்களுக்கு தீர்வை கண்ட பின்னர் நாடு முன்னோக்கி நகரும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். -
No comments
Post a Comment