Latest News

January 26, 2015

கிழக்கு முதலமைச்சர் பதவி கூட்டமைப்பின் நிலைப்பாடு சரியானதே-சுமத்திரன்
by admin - 0

 TNA-SLMC
 TNA-SLMC
கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு நியாயமானது. கிழக்கிலுள்ள மூன்று மாவட்டங்களிலும் இரண்டு மாவட்டங்களில் கூடிய வாக்குகளைப் பெற்று முன்னிலையிலுள்ள நாம் முதலமைச்சர் பதவிக்குத் தகுதியா னவர்களே.
எமது இந்த நிலைப்பாட்டை பிடிவாதம் பிடிப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் கூறுவது ஏற்புடையதல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
2012 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலின் போது கூடிய வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைவிட 6,100 வாக்குகளையே நாங்கள் குறைவாகப் பெற்றிருந்தோம். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் எங்களைவிட 60 ஆயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்று மூன்றாவது இடத்திலேயே இருந்தது. இதுமட்டுமன்றி திருகோணமலை மட்டக்களப்பு மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முன்னிலை பெற்றிருந்தது.
கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைக்கும் சந்தர்ப்பம் வந்தபோது நாங்கள் முஸ்லிம் காங்கிரஸிற்கு அழைப்பு விடுத்திருந்தோம். அவர்களில் ஒருவருக்கு முதலமைச்சர் பதவியை வழங்குவதாகவும் நாம் தெரிவித்திருந்தோம். ஆனால் தேர்தல் காலங்களில் எதிர்த்துப் பிரசாரம் செய்துவந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடனேயே முஸ்லிம் காங்கிரஸ் இணந்து ஆட்சி அமைத்திருந்தது.
அவர்களுடைய அமைச்சரவையில் எந்தத் தமிழ்ப் பிரதி நிதியும் இணைத்துக் கொள்ளப்படவில்லை. தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற கிழக்கு மாகாண அமைச்சரவையில் கடந்த இரண்டரை வருடங்களாக எந்தவொரு தமிழ்ப் பிரதிநிதியும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
தற்போது மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் கிழக்கு மாகாண சபையி லும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும்பான்மையை இழந்துள்ளது. எனவே பெரும்பான்மையை பெற்றுள்ள நாம் முஸ்லிம் காங்கிரஸிற்கு இரண்டாவது சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளோம். ஆனால் அவர்கள் முதலமைச்சர் விடயத்தில் மீண்டும் எமக்கு ஆதரவு தர மறு க்கின்றார்கள். மாறாக நாங்கள் பிடிவாதப் போக்குடன் இருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் நாங்கள் ஜனாதி பதியுடனும் பிரதமருடனும் கலந்துரையாடியிருந்தோம். அவர்கள் எமது பக்க நியாயத் தைப் புரிந்துகொண்டு எமக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் எதிர்வரும் பொதுத் தேர்தலை மனதில் வைத்துத்தான் முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க முடிய வில்லை என்று சில முஸ்லிம் பிரதிநிதிகள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். இந்தக் கரு த்து ஏற்புடையதல்ல. இதன்மூலம் தேர்தல் இலாபம் கருதியே முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாடுகள் இருப்பதாக எமக்கு எண்ணத் தோன்றுகின்றது என்றும் சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.
« PREV
NEXT »