13 திருத்தம் |
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் திட்டத்திற்கு மட்டுமே ஜாதிக ஹெல உறுமய கட்சி ஒத்துழைப்பு வழங்கும் என கட்சியின் பேச்சாளர் நிசாந்த சிறிவர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் கொள்கைப் பிரகடனத்தில் 13ம் திருத்தச் சட்டம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்துவது குறித்து எவ்வித பேச்சுவார்த்தைகளும் கட்சிகளுக்கு இடையில் நடத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த அரசியல் கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் அண்மையில் கருத்து வெளியிட்டதாக ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்தி குறித்து சிங்கள பத்திரிகையொன்று நிசாந்த சிறிவர்ணசிங்கவிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Social Buttons