முப்படையின் பெண் பிரிவினர் தலைமையேற்று பேரணி நடத்தியது முதற்கொண்டு, இந்தாண்டு குடியரசு தின விழாவில் பல முக்கிய அம்சங்கள் முதன் முறையாக நடந்தேறியது.
நாட்டின் 66வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி ராஜ்பாத் சாலையில் நடந்த குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அந்த விழாவின் முக்கிய அம்சங்களாக
1) முதன் முறையாக முப்படையின் பெண் பிரிவினர் தலைமையேற்று பேரணியில் கலந்துகொண்டனர்.
2)முதன்முறையாக இந்திய குடியரசு தினவிழாவில் சிறப்புவிருந்தினராக அமெரிக்கஅதிபர் ஒபாமா மனைவி மிட்செல் ஒபாமாவுடன் கலந்து கொண்டார்.
3)முதன்முறையாக ஜனாதிபதி மற்றும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டவர்கள் தனித்தனியாக வாகனங்களில் பயணித்தது.
4) முதன்முறையாக கோப்ரா எனப்படும் நக்சல் எதிர்ப்புபடையினர் அணிவகுப்பு பேரணியில் பங்கேற்றது
5) முதன்முறையாக நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கும் மிக்-29 கே ரக ஜெட் விமானம் அணிவகுப்பில் வந்தது.
Social Buttons