யாழ்.வல்வெட்டித்துறை நகரசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இருவர் ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஆதரவு வழங்கப் போவதாக தெரிவித்திருப்பதுடன், அவரைச் சந்திக்க இருவரும் கொழும்பு சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பான உறுப்பினர்களான கே.ஜெயராஜா மற்றும் எம்.மயூரன் ஆகிய இரு உறுபப்பினர்களும் மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் குறித்த கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது,
இந்த விடயம் தொடர்பாக எனக்கும் தகவல் கிடைத்திருந்தது. பின்னர் நான் அவர்களுடன் தொடர்பு கொண்டுகேட்டபோது,
தாங்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கப் போவதாகவும், அதற்காக கொழும்பு சென்றிருப்பதாகவும் தங்களை மன்னித்து விடுங்கள், எங்களை கூட்டமைப்பு அவ்வாறு நடத்திவிட்டது என அவர்கள் கூறியதாக தெரிவித்தார்.
Social Buttons