Latest News

January 04, 2015

ஜெனிவாவில் சரியான நேரத்தில சரியான இடத்தில் கே.பியை கொண்டு போய் நிறுத்துவோம் - இலங்கை அரசாங்கம்
by admin - 0

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் குற்றச்சாட்டுகளை முறியடிப்பதற்கு, சரியான இடத்தில், சரியான நேரத்தில் பயன்படுத்துவதற்காகவே,   கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனை பாதுகாப்பாக வைத்திருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், சிறிலங்கா அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த இதுகுறித்து தெரிவிக்கையில்,

“ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் குற்றச்சாட்டுகளை முறியடிப்பதற்கும், ஜெனிவாவிலும், ஏனைய இடங்களிலும் சிறிலங்காவுக்கு எதிரான அனைத்துலக பரப்புரைகளுக்கு எதிராக போராடவும், சரியான நேரத்தில சரியான இடத்தில் கொண்டு போய் நிறுத்துவதற்காகவே கே.பியை அரசாங்கம் பாதுகாப்பாக வைத்திருக்கிறது.

ஆனால், எதிர்க்கட்சியினர் தவறான தகவல்களைப் பரப்பி மக்களைக் குழப்ப முனைகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments