Latest News

January 30, 2015

தமிழர்கள் மீதான பாலியல் வன்கொடுமையினை ஆவணப்படுத்திய கலாநிதி பிறையன் செனிவிரத்தின!
by Unknown - 0

தமிழ்மக்களின் நீதிக்காக 1948ம் ஆண்டிலிருந்து குரல் கொடுத்துவருபவரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செனற்சபை உறுப்பினருமாகிய கலாநிதி பிறையன் செனிவிரத்தினவால் எழுதப்பட்ட “Sri Lanka: Rape of Tamil Civilians in the North and East by the Sri Lankan Armed Forces” எனும் புத்தகம் அவுஸ்றேலியாவில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

177 பக்கங்களைக் கொண்ட இப்புத்தகம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் நியு சவுத் வேல்ஸ் மாநிலத்திலுள்ள ஸ்ரத்வீல்ட் நகரிலுள்ள கறிங்ரன் தேவாலய மண்டபத்தில் கடந்த சனவரி மாதம் 17ம் தேதி வெளியிட்டு வைக்கப்பட்டது.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் செனற்சபை உறுப்பினர் லீ றியனன் அவர்கள் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்ததோடு அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை ஏன் கண்டனம் செய்யவில்லை என்ற தலைப்பில் உரையாற்றினார்.

முன்னாள் நீதியரசரும், முன்னாள் நியூ சவுத் வேல்ஸ் மாநில அமைச்சருமான ஜோன் டவுட் (Chancellor – Southern Cross University) புத்தகத்திற்கான ஆய்வுரையை வழங்கியுள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தினரால் (உயர் அதிகரிகள் உட்பட) ஆண், பெண், சிறுமிகள், சிறுவர்கள் என பராபட்சமின்றி தமிழர்கள் இலங்கைத்தீவில் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார்கள் என தனது நிறைவுரையில் கலாநிதி பிறையன் செனிவிரத்தின அவர்கள் கூறியிருந்தார்.

இப்புத்தக வெளியீட்டு நிகழ்வில் பல தமிழ் அமைப்புக்கள் மற்றும் ஆர்வலர்கள் பலர் பங்கெடுத்திருந்ததோடு புத்தகத்தினால் பெறப்படும் வருமானம் தமிழீழத் தாயகத்தில் சிறிலங்கா இராணுவத்தின் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




« PREV
NEXT »