Army |
இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என் றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்
வடக்கில் இராணுவ முகாம்களுக்கு கல்வீச்சு தாக்குதல்களை மேற்கொண்டு குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் தெற்கில் மக்கள் மத்தியில் இனவாதத்தை பரப்ப சிலர் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு தெற்கில் இனவாதத்தை பரப்பி எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கப்படுகின்றது.
இதற்காக வடக்கில் 400 இராணுவத்தினர் பயிற்றுவிக்கப்படுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இராணுவ அதிகாரிகளே எமக்கு இது குறித்து தகவல்களை வழங்கினர். இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
வடக்கில் இவ்வாறு இராணுவ முகாம்களுக்கு கல்வீச்சு தாக்குதல்களை ஏற்படுத்துவதன் மூலம் தெற்கு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதே இவர்களின் நோக்கமாக உள்ளது. இந்த விடயம் குறித்து அரசாங்கத்தின் தேசிய நிறைவேற்று சபை யிலும் கலந்துரையாடப்பட்டது. அதன்படி முழுமையான விசாரணை நடத்த தீர்மா னிக்கப்பட்டது என்றார்.
Social Buttons