இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க, இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் இராணுவத்தால் அமைத்து நடத்தப்படும் தல்செவன விடுதிக்கு நேற்று முன்தினம் (29/01/2015)அன்று சென்று புதிய நீச்சல் குளம் மற்றும் கிளப் என்பவற்றை திறந்து வைத்தார்.இதன்போது அந்த விடுதி நடத்தும் இராணுவத்துக்கு தொலைக்காட்சி , புத்தகங்கள் போன்றவற்றை வழங்கினார் .
இதன்போது ஸ்ரீலங்கா இராணுவ பொறியல் படையல் அமைக்கப்பட்ட நீச்சல் தடாகத்தையும் திறந்து வைத்தார் .
தமிழ் மக்கள் முகாங்களில் இருக்க குளிக்க வசதியின்றி இருக்க ஸ்ரீலங்கா படைகளோ தமிழர் நிலங்களில் விடுதி கட்டி நீச்சல் தடாகம் அமைத்து தங்கள் வருமானங்களை பெருக்கிகொள்கிறார்கள்.
ஆட்சி மாற்றம் இந்த நடவடிக்கைக்கு எந்தவித குறுக்கிடும் தரவில்லை என்பதோடு சிங்கள பெருக்கம் தமிழர் தேசமெங்கும் இன்றும் வழமை போல இடம்பெறுவதை எடுத்துகாட்டுகிறது .
செய்தி சரவணை மைந்தன்
Social Buttons