இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவதில் மத்திய அரசு அவசரம் காட்டக்கூடாது என்று காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
இது குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’இலங்கையில் புதிய அரசு தற்போதுதான் அமைந்துள்ளது. இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவதில் மத்திய அரசு ஏன் அவசரம் காட்டுகிறது என்று தெரியவில்லை.
இலங்கையிலிருந்து வந்த அகதிகளுக்கு அங்கு அவர்களுக்கு சொந்தமான வீடு, நிலம் ஆகியவை அவர்களுக்கே திருப்பி கொடுக்கப்படும் என்பதும், அவர்களுக்கு குறைந்தபட்ச உரிமைகளும் அளிக்கப்படும் என்பதும் உறுதி செய்யப்படாத நிலையில் அவர்களை திருப்பி அனுப்பக்கூடாது என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம். அப்படி திருப்பி அனுப்ப மத்திய அரசு முயற்சி செய்தால் அதை எதிர்த்து ஒட்டு மொத்த தமிழகமும் கிளர்ந்தெழும்’’என்று தெரிவித்தார்
Social Buttons