Latest News

January 30, 2015

33,000 லீற்றர் டீசலுடன் மயிரிழையில் விபத்தில் இருந்து தப்பிய பவுசர்
by admin - 0

வட்டவளை எல்லையில் ஹற்றன்-கொழும்பு பாதையில் முதுராஜவலயிலிருந்து கொடகல நோக்கி 33,000 லீற்றர் டீசலுடன் பயணித்துக்கொண்டிருந்த தனியார் நிறுவத்திற்குச் சொந்தமான பவுசர் வாகனமொன்று மயிரிழையில் பாரிய விபத்திலிருந்து தப்பியுள்ளது.






இன்று அதிகாலை 5 மணியளவில் வாகனத்தில் ஏற்பட்ட திடீர்க் கோளாறால் பாதையை விட்டு விலகியபோதும் பாரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் சம்பவத்தில் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லையெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

« PREV
NEXT »

No comments