Latest News

January 30, 2015

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்துக்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் மாணவன் பலி !
by Unknown - 0

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்துக்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் அந்த பாடசாலையில் பயிலும் உயர்தர மாணவன் உயிர்  இழந்ததுடன் மற்றொரு மாணவன் படுகாயம் அடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த விபத்தில் இன்று  நண்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றது. பாடசாலையில் இருந்து மோட்டர் சைக்கிளில் எ9 வீதியை கடக்க முற்ப்பட்ட போது எதிர்பாரா விதமாக கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி வந்த தனியார் பஸ் மோதியதில் இவ்  விபத்து இடம்பெற்றது .

இவ்  விபத்தில் 2016 ஆம் ஆண்டு உயர்தர மாணவனான சுலக்ஷ்சன் உயிர் இழந்ததுடன் கிருசாந்தன் படுகாயம் அடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

« PREV
NEXT »