Latest News

January 16, 2015

ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் வளர்மதி ஜெயலலிதாவிடம் ஆசி
by admin - 0

ஜெயலலிதா பதவி பறிபோனதால் காலியாக உள்ள ஸ்ரீரங்கம் சட்டசபை
தொகுதிக்கு பிப்ரவரி 13ம்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஆனந்த் திமுக சார்பில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி குஷ்புவை களமிறக்கலாமா என்றும், பாஜக நெப்போலியனை போட்டியிடச் செய்யலாமா என்றும் யோசித்து வருகிறது. தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் இன்னும் வேட்பாளர் தேர்வில் ஒரு முடிவிற்கு வரவில்லை

இந்நிலையில், அதிமுக தனது வேட்பாளரை இன்று பிற்பகல் அறிவித்தது. திருச்சி நகர மாவட்ட அதிமுக இணைச் செயலாளர் எஸ்.வளர்மதி ஸ்ரீரங்கம் தொகுதிக்கான வேட்பாளர் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். வளர்மதி வழக்கறிஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதாவுக்கு பதிலாக மீண்டும் ஒரு பெண்மணியே போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனிடையே சென்னையில், ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் வளர்மதி சந்தித்து ஆசி பெற்றார்.


« PREV
NEXT »