2015 ஆம் ஆண்டுக்கான ஒஸ்கார் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சிறந்த திரைப்படத்துக்கான விருதுக்கு பேர்ட்மேன், தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் உட்பட 8 படங்கள் போட்டியிடுகின்றன. இந்த இரண்டு படங்களும் 9 வேறுபட்ட விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
போலந்து, ரஷ்யா, எஸ்டோனியா, மோரிடானியா மற்றும் ஆர்ஜென்டினாவில் தயாரிக்கப்பட்ட படங்கள் சிறந்த வேற்று மொழித் திரைப்படத்துக்கான ஒஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
ஹோலிவுட் திரையுலகில் உயர்ந்ததாகக் கருதப்படும் இந்த விருதுகள் வழங்கும் விழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஒஸ்கார் விருது வழங்கும் விழாவை நேரடி நிகழ்வாக நான்கு கோடி 30 லட்சம் அமெரிக்கர்கள் தொலைக்காட்சியில் பார்த்துள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளில் மிகவும் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட நேரடி ஒளிபரப்பு இது என்பது விசேட அம்சமாகும்.
Social Buttons