தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவது குறித்த மத்திய அரசின் கொள்கையை கைவிட வேண்டும் என தமிழக முதலவர் ஓ. பன்னீர்ச்செல்வம் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது தொடர்பாக இலங்கை - இந்தியா வெளியுறவு அமைச்சக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழக அரசு சார்பில் மூத்த அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது.
அக்கடிதத்தில், "இலங்கைக்கு திருப்பி அனுப்புவது தொடர்பான பேச்சுவார்த்தையை இத்தருணத்தில் மேற்கொள்வது சரியானதாக இருக்காது.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்னும் நிலைமை சீரடையவில்லை. இத்தகைய சூழலில் தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பு அனுப்புவது தொடர்பான பேச்சுவார்த்தையை ஒத்திவைப்பதே சரியானதாகும்.
இலங்கையில் சமீபகாலமாக நிலவும் அரசியல் மாற்றம் சில நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், தமிழர் பகுதியில் இன்னும் இலங்கை ராணுவத்தினர் இருப்பது தயக்கத்தை ஏற்படுத்துகிறது.
இலங்கையில் முகாம்களில் வாழும் தமிழர்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்ற இலங்கையின் புதிய அரசின் வாக்குறுதி செயல்பாட்டுக்கு வரும்போது இங்கிருக்கும் தமிழ் அகதிகளுக்கும் தாயகம் திரும்ப வேண்டும் என்ற எண்ணம் உதயமாகும்" என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
No comments
Post a Comment