சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் பொது நிர்வாகத் துறையின் பேராசிரியரும் தலைவருமான ராமு மணிவண்ணன் அவர்கள், ஆயிரம் பக்கங்களைக் கொண்ட இந்நூலினை படைத்துள்ளதோடு, லண்டன் அறிமுக நிகழ்வில் நேரடியாக பங்கெடுக்க இருக்கின்றார்.
சென்னையிலும் ஜெனீவாவிலும் கனடாவிலும் என பல்வேறு முக்கிய தலைநகரங்களில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆவணத்தின் லண்டன் அறிமுக நிகழ்வினை நாடுகடந்த தமிழீழ
அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
அமைப்புக்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியலாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இந்நிகழ்வில் அனைத்து பொதுமக்களையும் பங்கெடுத்துக் கொள்ளுமாறு நா.தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அழைத்துள்ளார்.
இந்நிகழ்வு எதிர்வரும் 31-01-2015 அன்று
Harrow Civic Centre, 2nd Floor, Sation Road, HA12XY
எனும் முகவரியில் மாலை 6:30 முதல் இரவு 9:30 மணி வரை இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.
No comments
Post a Comment