தனது பதவி பறிப்பு தவறானது எனவும் சட்ட விரோதமானது எனவும் ஜனாதிபதியும் அமைச்சரவையும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், வைபவ ரீதியான பதவியேற்பின் அவசியமில்லாது மீண்டும் பிரதம நீதியரசராக பணியைத் தொடர ஹல்ப்ஸ்டொப் வந்த சிராணி பண்டாரநாயக்கவுக்கு சட்டத்தரணிகள் சங்கம் வரவேற்பளித்து ஏற்றுக்கொண்டுள்ளது.
இதனடிப்படையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு சற்று முன்னர் வருகை தந்த சிராணி பண்டாரநாயக்கவை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் உபுல் ஜயசூரிய வரவேற்று அழைத்துச் செல்வதை படங்களில் காணலாம்.
இன்று காலை முதல் ஹல்ப்ஸ்டொபில் சட்டத்தரணிகள் மொஹான் பீரிசுக்கு எதிராக தீவிர ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியிருந்த போதும் (இதுவரை) தான் பதவி விலகப் போவதில்லை என்றே மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment