இந்த நடவடிக்கையானது குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தின் அவசியமன்று. அரசியல் அழுத்தங்கள் காரணமாகவே வாக்கு மூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக அக்கட்சியின் பரப்புரை செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிங்களப் பத்திரிகையொன்று அவர் தெரிவிக்கையில், குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள அதிகாரிகள் பன்னிப்பிட்டியில் அமைந்துள்ள எமது காரியாலத்திற்கு வந்து குமார் குணரட்னம் பற்றிய விபரங்களை கோரியதுடன், அவர் நேரில் வந்து வாக்கு மூலமொன்றை அளிக்க வேண்டுமென கோரியிருந்தனர்.
இந்த நடவடிக்கையின் மூலம் தற்போதைய அரசும் மாற்றுக் கருத்துடையவர்களுக்கு பல்வேறு வழிகளில் இடையூறு ஏற்படுத்துவதன் மூலம் கடந்த அரசின் ஆட்சிக் காலத்தைப் போன்று இந்த அரசின் ஆட்சிக் காலத்திலும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த செயலானது மாற்றுக் கருத்துடையவர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தடை ஏற்படும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்தார்.
No comments
Post a Comment