தபால் மூல வாக்களிப்பின் முடிவுகளை வெளியிடுவதில் குழப்பமான நிலை நீடிப்பதாக ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன
மொத்தமாக 20 மாவட்டங்களின் முடிவு முழுமையாக்கப்பட்டுள்ளதாகவும் அம் முடிவுகளில் 14 மாவட்டங்களில் மைத்திரிபால சிரிசேனவும் 06 மாவட்டங்களில் மகிந்த ராஜபக்ஸவும் வெற்றி பெற்றுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏனைய 04 மாவட்டங்களின் முடிவுகள் முடிவுறவில்லை எனவும் குறிப்பிடும் தேர்தல் செயலகம், மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டிய மாவட்டங்களை அறிவித்தால் சில சந்தர்ப்பங்களில் குழப்பங்கள் ஏற்படலாம் என்பதனால் முடிவுகளை தாமதப்படுத்துவதாகவும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்துக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (எஸ்.ரி.எப்) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் செயலகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வீதி தடுப்புகளும் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Social Buttons