Latest News

January 02, 2015

இவ்வாண்டின் முதலாவது கிரிக்கட் டெஸ்ட் போட்டி நியூசிலாந்தில்!
by Unknown - 0

இலங்கை கிரிக்கட்  அணியின் இவ்வாண்டுக்கான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை (03) நியுசிலாந்தின் வெலிங்டன் நகரில் நடைபெறவுள்ளது.நியூசிலாந்த அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இந்த டெஸ்ட் போட்டியானது  இம்மாதம் 7 ஆம் திகதி வரை நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளின் இவ்வாண்டுக்கான முதலாவது டெஸ்ட் போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது. 

மைக்கல் அஞ்சலோ தலைமையில் இலங்கை அணியில் கெஷால் சில்வா- திமுத் கருணாரத்ன- குமார் சங்கக்கார- லஹிரு திரிமான- நிரோஷன் திக்வெல்ல- பிரசன்ன ஜயவர்தன- தரிந்து கௌஷால்- தம்மிக்க பிரசாத்- ஷாமிந்த எரங்க- சுரங்க லக்மால்- துஷ்மந்த சமீர- தினேஷ் சந்திமல்- நுவன் பிரதீப் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் இப்போட்டியில் களமிறங்கவுள்ளனர்.

நியூசிலாந்து அணியில்  பிரட்டன் மெக்கியுலம்- டொம் லெதம்- ஹமீஷ் ருத்போர்ட்- கேன் விலியம்சன்- ரோஸ் டேலர்- ஜேம்ஸ் நீஷம்- பி.ஜே. வெட்லின்- மாக் க்ரெயிக்- டீம் சவுகீ- நீல் வெக்னர்- டிரன்ட் போல்ட்- குரே அண்டர்சன்- மற்றும் டொக் பேஸ்வெல் ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.

டெஸ்ட் போட்டியின் பின்னர் இலங்கையின் நியூசிலாந்து பயணத்தில் 7 ஒரு நாள் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. அதில் முதலாவது ஒருநாள் போட்டி கிறைஸ்வர்ச் நகரில் எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ளது.
« PREV
NEXT »