டிவிட்டரை பயன்படுத்தி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்த்து வந்த மேதி பிஸ்வாஸ் மஸ்ரூருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தை சேர்ந்த மேதி பிஸ்வாஸ் பெங்களூருவிலுள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே டிவிட்டர் மூலம், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்க்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். இதுகுறித்து இங்கிலாந்தின் சேனல்4 கண்டுபிடித்து செய்தி ஒளிபரப்பியது.
இந்த தகவல் வெளியாகிய அடுத்த நாளே, பெங்களூருவில் மேதி பிஸ்வாஸ் மஸ்ரூரை போலீசார் கைது செய்தனர். 22 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று பெங்களூரு நகரின் 9வது பெருநகர் கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் மேதி ஆஜர்படுத்தப்பட்டார். அவரின் போலீஸ் காவலை நீட்டிக்குமாறு, காவல்துறை சார்பில் கோரிக்கைவிடுக்கப்படவில்லை. எனவே அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே, குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Social Buttons