இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான குமார் சங்கக்காரா கிரிக்கெட் வாழ்விலிருந்து ஓய்வு பெற திட்டமிட்டிருந்தார்.
37 வயதான சங்கக்காராவின் இந்த அறிவிப்பு வெளியானதுடன், முடிவை மறுபரிசீலனை செய்யும்படி அவரை அணித்தலைவர் மேத்யூஸ் மற்றும் தேர்வாளர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து உலகக்கிண்ணத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவில் மாற்றமில்லை, டெஸ்டில் தொடர்வது குறித்து மறுபரிசீலனை செய்வதாக உறுதி அளித்தார்.
இன்னும் ஒரு இரட்டை சதம் விளாசினால், 65 ஆண்டு கால பிராட்மேனின் சாதனையை அவர் சமன் செய்து விடுவார்.
அதை செய்ய விரும்புவதாக நேற்று நிருபர்களிடம் தெரிவித்த சங்கக்காரா, இந்த உலகக்கிண்ண கிரிக்கெட் முடிந்த பிறகே அடுத்து என்ன செய்வது என்பதை முடிவு செய்வேன்.
ஆனால் உலகக்கிண்ணம் முடிந்ததும் எதிர்காலம் குறித்த எனது சிந்தனை எப்படி அமையும் என்பதை இப்போதே கணிப்பது கடினம் என்று குறிப்பிட்டுள்ளார்.
Social Buttons