ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அதரவு தெரிவிக்க அமெரிக்காவில் இருந்து வந்து அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள் காலத்துக்கு காலம் அமெரிக்க வீசாவை புதுப்பித்து வருவதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் ஒருமைப்பாடு பற்றி பேசும் அரசாங்கத்தின் அமைச்சர்களும் அதிகாரிகளும் நீண்ட காலம் இலங்கையில் தங்கியிருக்க உத்தேசம் இல்லாதவர்களாகவே உள்ளனர்.
எனவேதான் காலத்துக்கு காலம் அவர்கள் தமது அமெரிக்கா வீசாக்களை புதுப்பித்து வருகின்றனர். குறிப்பாக கோத்தபாய ராஜபக்ச, பசில் ராஜபக்ச, டளஸ் அழகப்பெரும, சந்திம ராசபுத்ர, போன்றோர் இலங்கையில் அதிக காலம் தங்கியிருக்கும் உத்தேசம் இல்லாதவர்களாகவே உள்ளனர்.
இவர்கள் அமெரிக்காவில் சொத்துக்களை கொண்டுள்ளனர். 9 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்து ஜனாதிபதியை தேர்தலில் வெற்றி பெறச் செய்யும் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தினர்.
Social Buttons