கடந்த வாரம் இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு 162 பயணிகளுடன் பயணமான எயர் ஏசியா விமானம் 8501 அபாயகரமான பாரிய விபத்துக்குள்ளானதற்கு அங்கு நிலவிய அசாதாரண காலநிலையே காரணமாக இருக்கலாம் என இந்தோனேசிய வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் விமானத்தின் இயந்திர பகுதிக்குள் பனிப்புகை ஐஸ்கட்டிகள் உட்சென்று ஏற்பட்ட இயந்திரகோளாறினால் விமான இயக்கத்தில் கோளாறு ஏற்பட்டிருக்ககலாம் எனவும் அந்நிலையம் மேலும் தெரிவித்துள்ளது, விமானத்திலிருந்து கடைசியாக கிடைக்கப்பெற்ற தகவலின் போது போகும் வழியில் மிகவும் பனிக்கட்டியான நிலை காணப்படுவததாக தெரிவிக்கப்ட்டுள்ளது. எனவே ஆராய்ச்சி மற்றும் கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி ஏற்பட்ட இவ்விமான விபத்திற்கு ஐஸ்கட்டிகள் இயந்திர பகுதிக்குள் உட்புகுந்தமையால் ஏற்பட்ட அதிகூடிய குளிர் தன்மையால் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளளதாக இந்தோனேசிய செய்திகள் தெரிவிக்கின்றன.
விமானம் புறப்பட ஆரம்பித்து 40 நிமிடங்களின் பின்னர் அனைத்து தகவல்களும் தொடர்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது. விமான விபத்தின் பின்னர் விமானத்தின் பெரிய இரண்டு பாகங்கள் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கண்டுபிடிக்கப்பட்டதுடன் 30 பேரின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொடரும் தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் ஏனையோரின் சடலங்களும் விமானத்தின் கறுப்புப்பெட்டியும் கண்டுபிடிக்கப்படலாம் என நம்பப்படுகிறது. எனினும் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை தேடுதல் நடவடிக்கைகளுக்கு பெரிதும் இடையூறாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
Social Buttons