Latest News

January 05, 2015

டோணி இன்றைய டெஸ்ட்ல் ஆடுவார?
by Unknown - 0

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தடாலடியாக கூறி விட்டு அமைதியாகி விட்ட டோணி, நாளை சிட்னியில் தொடங்கும் 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு இருப்பதாக புதிய செய்தி வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவுடனான 3வது டெஸ்ட் போட்டியின் இறுதியில் திடீரென்று ஓய்வு முடிவை அறிவித்து அனைவரையும் அதிர வைத்தவர் டோணி.

இதையடுத்து கோஹ்லி புதிய கேப்டனாக உடனடியாக அறிவிக்கப்பட்டார். டோணியின் ஓய்வு முடிவுக்கு காரணம் என்று பல சமாச்சாரங்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் நாளைய போட்டியில் டோணி விளையாடலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் கேப்டனாக டோணி செயல்பட மாட்டார் என்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அவர் களத்தில் இறங்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

விக்கெட் கீப்பர் விருத்திமன் சாஹா காயமடைந்திருப்பதால், டோணி விளையாட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கேப்டன் விராத் கோஹ்லி கூறுகையில், சாஹாவின் காயம் சரியாகவிட்டால், டோணி விளையாடுவார் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், இந்திய அணியில் சாஹா தவிர விக்கெட் கீப்பராக டோணி மட்டுமே உள்ளார். எனவே சாஹாவால் நாளை காலைக்குள் விளையாட முடியாத நிலை ஏற்படுமானால், வேறு யாராலும் கீப்பிங்கை செய்ய முடியாத நிலை ஏற்படும். என்னால் நிச்சயமாக அதைச் செய்ய முடியாது என்றார் கோஹ்லி. ஆனால் டோணி இதுகுறித்து இதுவரை கருத்து வெளியிடவில்லை. ஓய்வு முடிவை கைவிட்டு விட்டு அணிக்கு கை கொடுக்க முன்வருவாரா டோணி என்பது நாளை கா்லை தெரிய வரும்.

« PREV
NEXT »