புதிய ஜனாதிபதி ஆட்சி பொறுப்பேற்றதன் பின்னர் வடக்கிற்கான பயணத்தடை நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்த சில வெளிநாட்டுப் பயணிகள், தாம் வடக்கிற்கு வருவதற்கு பல சிக்கல்களை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
இதேவேளை வவுனியா- ஓமந்தை சோதனைச் சாவடியில் நடைமுறையில் இருந்த கடவுச்சீட்டு பதிவு நடவடிக்கை தற்போதும் அமுலில் இருப்பதுடன், நேற்றைய தினமும் கடவுச் சீட்டுடன் வந்த சிலர் பதியப்பட்டே அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இந்நிலையில் இவ்வாறான தொடர் நடவடிக்கைகள் வெளிநாட்டவர்கள் இலங்கைக்குள்ளும், வடக்கிற்கும் வருவதற்கான அச்ச நிலைகளை மேலும் அதிகரிப்பதாகவே உள்ளது. சிங்களம் சொல்வது ஒன்று செய்வது ஒன்று
No comments
Post a Comment