Latest News

January 18, 2015

வடக்கு, கிழக்குக்கு சில பொருட்களை எடுத்துச்செல்லத் தடை
by admin - 0

வடக்கு, கிழக்குக்கு கொண்டு செல்லக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்டிருந்த சில பொருட்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதுடன் சில பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. புதிய அரசு பதவி ஏற்ற பின்பும் இன்னும் சில பொருட்களுக்கு தடை வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் நடைமுறையில் உள்ளது .

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற முதலாவது பாதுகாப்பு சபை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்துக்கு யுத்த உபகரணங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் கொண்டு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வடக்கு அந்த பொருட்களுடன் இரட்டை தொலைக்காட்டி( பைனோகியூலர்), இராணுவ சீருடைகளை ஒத்த சீருடைகள் மற்றும் துணிவகைகளை எடுத்துச்செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments