விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர், கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனைக் கைது செய்யக் கோரி நாளை நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது ஜெ.வி.பி.
ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து கே.பி. வெளிநாடு சென்றுவிட்டதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிவித்திருந்த போதும், தான் உள்நாட்டில், கிளிநொச்சியிலேயே தங்கியிருந்து மனித நேயப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக அவர் ஊடகங்களுக்கு அறிவித்திருந்த நிலையில் தற்போது அவரைக் கைது செய்யக் கோரி நீதிமன்றை நாடப்போவதாக அறிவித்துள்ளது ஜே.வி.பி.
யுத்த காலத்தில் கே.பியால் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே அவரைக் கைது செய்யக் கோரவுள்ளதாக ஜே.வி.பி தரப்பு விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment