விஜய்யின் திரைப்பயணத்தை ஒரு படி மேலே கொண்டு சென்றவர் இயக்குனர் முருகதாஸ். சமீபத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி இயக்கத்தில் வெளிவரவிருக்கும் டூரிங் டாக்கீஸ் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.
இதில் பேசிய முருகதாஸ் ‘எஸ்.ஏ.சி சார் அவர்களுக்கு மட்டும் தான் யாராலும் அழிக்க முடியாத புகழ் ஒன்று உள்ளது. இந்தியாவின் நம்பர் 1 இயக்குனர் ஷங்கர் இவருடைய சிஷ்யன் தான். அதே போல் இந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகர் விஜய்யை உருவாக்கியது அவர் தான், அவர் வீட்டிலேயே சூப்பர் ஸ்டாரை வைத்துள்ளார்’ என்று கூறியுள்ளார்.
Social Buttons