தமிழர்களை கொன்று குவித்த போர் குற்றவாளி சரத் பொன்சேகாவின் இராணுவ ஜெனரல் பதவி மீள அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இராணுவ நீதிமன்றின் ஊடாக சரத் பொன்சேகாவின் பதவிகள் பட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சரத் பொன்சேகாவிற்கு கடந்த 21ம் திகதி முழு அளவில் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் சரத் பொன்சேகா மீளவும் நான்கு நட்சத்திர ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்பட்ட சகல இராணுவ பதவிகள் பட்டங்களும் மீள அளிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ஜயனாத் பெரேரா இன்று தெரிவித்துள்ளார்.
Social Buttons