Latest News

January 27, 2015

நரேந்திர மோடி மார்ச்சில் இலங்கை வருகிறார்
by admin - 0

www.vivasaayi.com
MODI

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் 14 ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா அறிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14 ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில் இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொள்வார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் இடம்பெற்ற இந்திய குடியரசு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே வை.கே சிங்ஹா இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
கடந்த 1987 ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தியின் விஜயத்தின் பின்னர் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளும் முதலாவது இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும். இடைப்பட்ட காலப்பகுதிகளில் ஏனைய இந்திய பிரதமர்கள் கூட்டு கலந்துரையாடல்களில் கலந்து கொள்ளும் நோக்கிலேயே இலங்கை வந்திருந்தனர்.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயத்தின் போது, புத்தகயா மற்று;ம் திருப்பதி சமய தலங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.
மகாவிஷ்ணு இலங்கையின் பாதுகாப்பு பொறுப்பை புத்த பகவானுக்கு வழங்கியதாக நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள கட்டுரையொன்றில் தெரிவி;க்கப்பட்டுள்ளது.
ஜே.ஆர்.ஜயவர்தன உள்ளிட்ட முன்னாள் அரச தலைவர்கள் பலரும் திருப்பதி திருத்தலத்திற்கு சென்று சமய நிகழ்வுகளில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தநிலையில், நேற்று கொழும்பில் இடம்பெற்ற இந்திய குடியரசு தின நிகழ்விற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைக்கப்பட்டிருந்தார்.
பொதுவாக இந்திய இல்லத்தில் இடம்பெறும் குடியரசு நிகழ்வுகளுக்கு அரச தலைவர்கள் அழைக்கப்படுவதில்லை என்ற சம்பிரதாயத்திக்கு புறம்பாக பிரதமர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »