Latest News

January 27, 2015

தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்து விட்டதாக இலங்கை அரசு சட்டப்பூர்வமாக எந்தவித ஆதாரங்களையும் வெளியிடவில்லை
by admin - 0


Pirabaharan vivasaayi
தேசியத் தலைவர் 
தேசியத் தலைவர் மேதகு   வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்து விட்டதாக இலங்கை அரசு சட்டப்பூர்வமாக எந்தவித ஆதாரங்களையும் வெளியிடவில்லை என்று இலங்கையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த போரில் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் இறந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.


ஆனால் பிரபாகரன் இறந்து விட்டதாக இலங்கை அரசு சட்டப்பூர்வமாக எந்தவித ஆதாரங்களையும் காட்டவில்லை என்று இலங்கையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி.தவராசா கூறியுள்ளார். இது தொடர்பாக லங்காசிறி என்ற வானொலிக்கு தவராசா அளித்த பேட்டியில், தேசியத் தலைவர் மரணம் தொடர்பாக இலங்கை அரசு தரப்பில் குழப்பம் இருக்கிறது. அவர்கள் கூறியதற்கான ஆதாரங்களை இதுவரை இலங்கை அரசு வெளியிடவில்லை. ஆனால் இந்த விஷயத்தில் தமிழர்கள் குழம்பவில்லை. பல அரசியல் தலைவர்கள்தான் குழம்பிப் போயுள்ளனர். இவ்வாறு தவராசா தெரிவித்துள்ளார்.


« PREV
NEXT »