Latest News

January 11, 2015

மகிந்த பிள்ளையான் கூட்டு பல தலைவர்களை கொல்ல சதி
by admin - 0

ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ தோல்வி கண்டதால் அராசங்கத்துடன் இயங்கிய ஆயுதக் குழுக்கள் பல மிளிர்ந்துள்ளது. குறிப்பாக இராணுவ புலனாய்வு பிரிவின் கிழக்கு மாகாண பொறுப்பாளராக இருந்த சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவருடைய முன்னாள் போராளிகள் மற்றும் கொலை, கொள்ளை, கடத்தலுக்கு பயன்படுத்திய இளைஞர் குழு, இவர்களுக்கு இராணுவ புலனாய்வு பிரிவின் மூலம் மாதாந்தம் ஒரு தொகை நிதியை வழங்கி வந்தது.

மகிந்த ராஜபக்ஷ வெல்ல வேண்டும் என்பதில் இராணுவ புலானய்வு பிரிவும், பிள்ளையானும், அவரது குழுவும் பல அட்டூழியம், அச்சுறுத்தல், இலஞ்சம் வழங்குதல் உட்பட பல நடவடிக்கையை மேற்கொண்டன. கிட்டத்தட்ட ஜனாதிபதி மூலம் தேர்தலுக்காக நூறு கோடி பெற்ற பிள்ளையான் அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர் சிலர், கிராம அதிகாரிகள் சிலர், கல்வி பணிப்பாளர்கள் சிலர், கல்வி அதிகாரிகள் சிலர், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் ஒரு சிலர் போன்றோர் மூலமும், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அமைச்சு உத்தியோகத்தர்கள் போன்றோரையும் பயன்படுத்தி மிக தீவிரமாக செயற்பட்டனர்.
ஆனால் இவர்கள் வெற்றி பெற்றிருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட அவர்கள் ஆதரவாளர்கள் பலரை கடத்தவும், கொலை செய்யவும் தீர்மானித்திருந்தனர். 

இவ்வேளை மகிந்த ராஜபக்ஷ தோல்வி அடைத்தால் பிள்ளையான், அசாத் மௌலானா, பிரசாந்தன், ரமேஷ், தேவராஜன் உட்பட இவரது குழுக்கள் கூடி ஆராய்ந்துள்ளது.

கோட்டபாய ராஜபக்ஷவின் ஆதரவுடன் இவர்களுக்கு இரசகியமாக ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மைத்திரி பால சிறிசேன ஆட்சியை குழப்பும் வகையில் மீண்டும் கொலை, கொள்ளை, கடத்தல்களை மேற்கொண்டு மக்களை பீதியடைய செய்தால் எதிர்வரும் ஏப்பிரல் மாத தேர்தலின் பின் மகிந்தவின் அரசாங்கத்தை கொண்டுவர முடியும் என தீர்மானித்துள்ளனர்.

இதில் முக்கியமாக தமிழ் தேசிய கூட்மைப்பு முக்கிய அரசியல் வாதிகளை குறி வைத்து முதலில் தாக்குவது என தீர்மானம் எடுத்தாக அறிய முடிகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பை தாக்கினால் எல்லோரும் பயமடைவார்கள் என்பது பிள்ளையான் குழுவின் நம்பிக்கையாகும். தான் வேறு நாடுகளுக்கு செல்லாது தமிழ் தேசிய கூட்டமைப்பை அடக்கி மீண்டும் தனக்கு கீழ் கிழக்கு மாகாணத்தை கொண்டு வருவதாக பிள்ளையான் தமது குழுவினருக்கு உறுதி அளித்துள்ளார்.
மீண்டும் தம்முடன் இயங்கிய ஆயுதக்குழு ஏனைய நடவடிக்கைக்குரிய இளைஞர் குழுக்களை திரட்டும் செயற்பாட்டில் பிள்ளiயான், ரமேஷ், பிரசாந்தன், தேவராஜன், ஜெயம், மார்க்கன் போன்றோர் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிள்ளையானுடன் தொடர்பு கொண்டு இந்நடவடிக்கையை மேற்கொள்ள ஆலோசனை வழங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் தனது தோல்வி வடக்கு கிழக்கு மக்களாலேயே நிகழ்ந்தது. அவர்களை அச்சுறுத்தினால், மீண்டும் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் தமது அரசாங்கத்தை மீண்டும் கொண்டு வர முடியும் என பிள்ளையானுக்கு மகிந்த தெரிவித்துள்ளார்.

அத்தோடு முஸ்லிம்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தவும், ஹிஸ்புல்லா மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. ஹிஸ்புல்லா பிள்ளையானுடன் சேர்ந்து இச்செயற்பாட்டுக்கு உதவ உறுதி வழங்கியுள்ளார். கொலை, கொள்ளை, கடத்தல் நடைபெற்றால் புலிகள் மீண்டும் தோன்றி விட்டனர் என்ற ஒரு பொய் பிரச்சாரத்தை கொண்டு மைத்திரி ஆட்சியையும், வடக்கு கிழக்கு தமிழ் மக்களையும் அச்சுறுத்த முடியும் என கூறியுள்ளனர்.

முன்பு பிள்ளையானால் சிலருக்கு ஆயுதங்கள் விற்கப்பட்டன. அவர்களிடம் மீண்டும் ஆயுதங்களை பெற பிள்ளையான் முயற்சித்துக் கொண்டிருக்கின்றார். இவ்வளவு காலமும் தாங்கள் மறைத்து வைத்த ஆயுதங்களையும் எடுக்க ஏற்பாடு செய்துள்ளான். மேலும் இராணுவ புலனாய்வு பிரிவினரும் பிள்ளையானிடம் சில ஆயுதங்களை வழங்கியுள்ளனர்.

மேற்தரப்பட்ட விடயங்கள் பிள்ளையானுடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்டுக் கொண்டிருப்பவர்கள் மூலம் வெளியாகியுள்ளது. இன்னும் பல விடயம் மிக விரைவில் வெளிவரும.; சில உயர் அதிகாரிகளின் நடத்தைகள், ஊழல்கள் போன்றவையும் கிடைத்துள்ளது விரைவில் வெளியிடப்படும்.
இதேவேளை மைத்திரியின் ஆட்சியில் பிரச்சினையை ஏற்படுத்த செல்லம் தியட்டர் மோகன் என்பவரை ஐக்கிய தேசிய கட்சியில் செயற்பட்டு மகிந்த ராஜபக்ஷவின் இராணுவ புலனாய்வு பிரிவுக்கு தகவல் கொடுக்கவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலத்தை இல்லாமல் செய்யவும் இராணுவ புலானய்வு பிரிவு பயய்படுத்தி வருவது இரகசியமாக வெளியாகியுள்ளது.

பிள்ளையானுடன் பண ரீதியாக பிரச்சனை பட்டு வெளியேறிய செல்லம் தியட்டர் மோகன் நீண்டகாலமாக இராணுவ புலனாய்வு பிரிவுடன் செயற்பட்டு வருவது எல்லோரும் அறிந்ததாகும். இராணுவ புலனாய்வு பிரிவின் ஆலோசனையுடனையே முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பாட்டை மோகன் ஆரம்பித்தார்.

தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளே நுழைந்து முஸ்லிம்களை ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஓரம் கட்ட நடவடிக்கை எடுக்கவும் செல்லம் தியட்டர் மோகனை இராணுவ புலனாய்வு (கோட்டபாய) ஏற்பாடு செய்துள்ளது.

இதேவெளை மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சியில் இருந்து வெளியேறும் போதும் பெருந்தொகையான பணத்தை எடுத்துச் சென்றுள்ளது. குறிப்பாக தற்போது வங்கிகளில் ஐயாயிரம் ரூபாய் பணம் பெறமுடியாமல் உள்ளது. அதிகப் படியாக பெறுமதியாக பணமாக ஐயாயிரம் ரூபாய் தாள் புளங்கியது. அது தற்போது வங்கியில் இல்லை. ராஜபக்ஷ சகோதர்களால் எடுக்கப்பட்டு விட்டது என புத்தி ஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

« PREV
NEXT »

No comments