Latest News

January 17, 2015

மகிந்தவின் அடுத்த பிரதமர்
by admin - 0

நிறைவேற்று அதிகார முறைமை ஒழிக்கப்பட்ட பின்னர் பிரதமர் பதிவிக்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

மைத்திரி ஆட்சியின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாது செய்யப்பட்டு பாராளுமன்றத்துக்குப் பதிலளிக்கும் வகையிலான ஆட்சி முறை உருவாக்கப்பட்டதும் பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

“அந்தத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாகப் போட்டியிட்டுப் பிரதமர் பதவியைக் கைப்பற்றுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முயற்சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் தற்போது வெளியிடும் கருத்துக்களினூடாக இந்த விடயத்தை ஓரளவு உறுதிப்படுத்தக் கூடியதாகவுள்ளது.

« PREV
NEXT »

No comments