Latest News

January 17, 2015

மஹிந்தவின் தலைமயில் அரசாங்கம் அமைப்போம்
by admin - 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் அரசாங்கமொன்றை அமைக்கப் போவதாக முன்னாள் தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.






எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

லங்கா சமசமாஜ கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, தேச விடுதலை முன்னணி, மஹஜன கட்சி உள்ளிட்ட கட்சிகள் இந்த திட்டத்திற்கு ஏற்கனவே ஆதரவினை தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தினேஸ் குணவர்தன தலைமையிலான மஹஜன கட்சி கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்திக் கொள்ளாது என கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் ஊடாக நாட்டுக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படக் கூடுமென தாம் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகள் கிடைக்காத காரணத்தினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தேர்தலில் தோல்வியைத் தழுவியதாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாகவும் இதன் மூலம் மீண்டும் இனவாதம் தலைதூக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள பௌத்த மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் மஹிந்த ராஜபக்ஸவிற்கு போதியளவு வாக்குகள் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ தொடர்பில் முழு அளவில் நம்பிக்கை உண்டு எனவும், நிச்சயமாக பொதுத் தேர்தலில் வெற்றியீட்டி ஆட்சியை கைப்பற்றுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ நல்லாட்சி நடத்திய காரணத்தினாலேயே ஜனநாயக ரீதியான தேர்தல் ஒன்றை முன்னெடுக்க முடிந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
« PREV
NEXT »