தேர்தலின் பின் தங்களை பாதுக்கக்கும்படி பசில் தன்னுடன் கோரிக்கை விடுத்ததாக ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்
இன்று காலை முன்னால் நீதி அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் கண்டி மாவட்டத்தில் முக்கிய ஊர்களாக கெலிஓய,அகுரன,மடவளை போன்ற இடங்களுக்கு விஜயம் செய்தார்,
கண்டியில் நகர சபை உறுப்பினர் அஸ்மின் மரிக்கார் இல்லத்தில் பிரதேச சபை உறுப்பினர்களுக்கான கலந்துரையாடலில் கலந்துகொள்ள சென்ற இவர் ,அரசாங்கத்துடன் இணைந்த மாகாண சபை உறுப்பினர் உவைஸ் ஹாஜியாரின் சொந்த ஊர் எலமல்தெனியவுக்கும் செல்லத் தவரவில்லை ,
அங்கு சென்ற அவர் அங்கே முஸ்லிம் பாடசாலையில் ஆயத்தமாகிக்கொண்டு இருந்த வாக்கச்சாவடியையும் பார்வையிட தவரவில்லை.
மடவளை முஸ்லிம் காங்கிரஸ் கிளை ஏற்பாடு செய்திருந்த பகல் போசன விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட ரவூப் ஹகீம் அவர்கள் நீண்ட நேர கலந்துரையாடலில் இன்று பசில் ராஜபக்ச தொடர்பு கொண்டு தங்களுக்கு தேர்தலுக்கு பின் இடையூறுகள் வராமல் பாதுகாக்குமாரு கேட்டுக்கொண்டதாகவும் பெரும்பாலும் நாளை இரவு பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என்று குறிப்பிட்டார்.
இவ்விடத்தில் ரவூப் ஹகீமின் அந்தரங்க செயலாளர் நயீமுல்லாஹ் உற்பட பிரதேச சபை உருப்பினர்கள் கட்சிப்போராளிகள் பலர் கலந்து கொண்டனர்
Social Buttons