இலங்கை தேர்தல் வரலாற்றில் ஒரு முக்கியமான தேர்தலாக கருதப்படும் 2015 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் நாளை ஜனவரி 8ஆம் திகதி நடைபெறுகிறது.இத்தேர்தல் இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலாகும்,
இலங்கையின் முதலாவது ஜனாதிபதி தேர்தல் 20.10.1982ஆம் ஆண்டு நடைபெற்றது. இறுதியாக நடந்த ஜனாதிபதி தேர்தல் 26.1.2010ஆம் திகதியன்று நடைபெற்றது. நாளை நடைபெறவிருப்பது ஏழாவது தேர்தலாகும்.
இத்தேர்தலில் நாடளாவிய ரீதியில் மொத்தம் 1,50,44,490 பேர் வாக்களிக்கும் தகைமையை பெற்றுள்ளனர்.. இவர்களுக்கு வாக்களிப்பதற்காக நாடு முழுவதிலும் 12,314 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருப்பதாகத் மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் எமது உத்தியோகபூர்வ இணையத்தளத்துக்கு தெரிவித்தார்.
இரண்டு சுயேட்சை வேட்பாளர்களோடு 17 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அடங்கலாக மொத்தம் 19 வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் விபரம் வருமாறு:-
01.பத்தரமுல்லே சீலரத்ன தேரர் - ஜனசெத பெரமுன
02.திரு. எம்.பி. தெமிணிமுல்ல ஒக்கொம வெஸியோ - ஒக்கொம ரஜவரு அமைப்பு
03.திரு. பாணி விஜேசிறிவர்தன - சோசலிச சமத்துவக் கட்சி
04.திரு. சிறிதுங்க ஜயசூரிய - ஐக்கிய சோசலிச கட்சி
05திரு. ராஜபக்ஷ பேர்சி மஹேந்திர - ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
06.திரு. ஜயந்த குலதுங்க - எக்ஸத் லங்கா மகா சபா கட்சி
07.திரு. விமல் கீகனகே - இலங்கை தேசிய முன்னணி
08.திரு. பள்ளேவத்தே கமராலலாகே மைத்திரிபால யாப்பா சிறிசேன - புதிய ஜனநாயக முன்னணி
09.திரு. இப்றாஹிம் நிஸ்தார் மொஹமட் மிப்லார் - ஐக்கிய சமாதான முன்னணி
10.திரு. துமிந்த நாகமுவ - முன்னிலை சோஷலிஸ கட்சி
11.திரு. ஏ.எஸ்.பீ. லியனகே - ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி
12.திரு. சுந்தரம் மகேந்திரன் - நவ சம சமாஜக் கட்சி
13.திரு. கட்டுகம்பல அப்புகாமிலாகெ பிரசன்ன பிரியங்கர- ஜனநாயக தேசிய இயக்கம்
14.திரு. ராஜபக்ஷ ஆரச்சிலாகே நாமல் அஜித் ராஜபக்ஷ - எமது தேசிய முன்னணி
15.திரு. ரத்நாயக ஆரச்சிகே சிறிசேன - தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி
16.திரு. சரத் மனமேந்திர - நவ சிஹல உறுமய
17.திரு. ருவன்திலக்க பேதுரு ஆரச்சி - எக்சத் லங்கா பொதுஜன கட்சி
18.திரு.ஐ.எம்.இல்யாஸ் -சுயேட்சை
19.திரு. பொல்கம்பல ராளலாகே சமிந்த அநுருத்த பொல்கம்பல - சுயேட்சை
இத்தேர்தலில் வாக்களிப்பு பணியாளர்களாக ஒரு லட்சத்து 23ஆயிரத்து 140 பேர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்..அவ்வாறே வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகளில் 42 ஆயிரத்து 470 பேர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.. தேர்தலின் போது 1419 நிலையங்களில் வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெறும்.
மாவட்ட ரீதியில் வாக்குகளை எண்ணும் மத்திய நிலையங்களாக தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலைகளின் பெயர் விபரங்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
கீழ் குறிப்பிடப்படும்படும் பாடசாலைளிலேயே வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
அந்த பாடசாலைகளின் பெயர்கள் வருமாறு:-
கொழும்பு மாவட்டம் - றோயல் கல்லூரி டி.எஸ் சேனாநாயக்க கல்லூரி
கம்பஹா மாவட்டம் - பத்தளகெதர வித்யாலோக வித்தியாலம்
களுத்தறை மாவட்டம்- தெதியவல மியூசியஸ் வித்தியாலயம்
கண்டி மாவட்டம்- சில்வெஸ்டர் கல்லூரி ஹேமா மாலி பாலிகா வித்தியாலம்
மாத்தளை மாவட்டம்- கிறிஸ்தேவ வித்தியாலயம்
நுவரெலிய மாவட்டம்- காமினி தேசிய பாடசாலை
காலி மாவட்டம்- இருதய கன்னியர் மடம்
மாத்தறை மாவட்டம்- சுஜாதா பாலிகா வித்தியாலயம்
ஹம்பந்தோட்டை மாவட்டம்- சுவி தேசிய பாடசாலை
யாழ்ப்பாணம் மாவட்டம்- யாழ் மத்திய மகா வித்தியாலயம்
முல்லைத்தீவு மாவட்டம்- முல்லைத்தீவு மகா வித்தியாலயம்
மட்டக்களப்பு மாவட்டம் - மட்டக்களப்பு இந்து மகா வித்தியாலயம்
திருகோணமலை மாவட்டம் -விபுலானந்தா மகா வித்தஜயாலயம்
குருநாகல் மாவட்டம் - மலியதேவ ஆண்கள் பாடசாலை –சேர் ஜோன் கொத்தலாவல மகா வித்தியாலயம்
புத்தளம் மாவட்டம்- ஸெய்னம்ப் மகளிர் வித்தியாலயம்- புனித எண்ரூ மகா வித்தியாலயம்
அனுராதபுரம் மாவட்டம் அனுராதபுரம் மத்திய மகா வித்தியாலயம்
பதுளை மாவட்டம் - பதுளை மத்திய மகா வித்தியாலயம்
மொனராகலை மாவட்டம்- மொனராகலை ரோயல் கல்லூரி
கேகாலை மாவட்டம்- கேகாலை பாலிகா வித்தியாலயம்- சுவர்ண ஜயந்தி மகா வித்தியாலயம்
தேர்தல் இம்முறை தேர்தல் முடிவுகள் முதலில் தேர்தல் திணைக்களத்தின் கணனி முறைமைக்கு உட்படுத்தப்படும். முடிவுகளைப் பெற விரும்பும் நிறுவனங்கள் குறிப்பிட்ட ஒரு தொகை கொடுப்பனவை தேர்தல் திணைக்களத்துக்கு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கும் நிறுவனங்களுக்கு தேர்தல் திணைக்களம் ஒரு இரகசிய இலக்கமொன்றை வழங்கும். அதனுாடாக இந்த முடிவுகளை உடனடியாக பெற்றுக்கொள்ள முடியும்.இந்த முறையின் மூலம் ஊடக நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த நேரத்தில் பெறுபேறுகள் கிடைக்கக் கூடிய அவகாசம் இருக்கின்றது.
தேர்தலில் கம்பியுட்டர் ஜில்மார்ட் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக கூறப்படுகின்றது. கம்பியுட்டர் ஜில்மார்ட் என்பது இலங்கையின் தேர்தல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இந்தச் சொல் தேர்தல்கள் திணைக்களத்துக்கு ஒரு விதத்தில் நன்மையாக காணப்பட்டது எனலாம். அதாவது தேர்தல் நடைமுறை குறித்து மக்களுக்கு விளக்குவதற்கு ஒரு வாய்ப்பை இந்த சொல் ஏற்படுத்தியது.
Social Buttons