Latest News

January 10, 2015

கேபி நாட்டில் இருந்தால் அநேகமாக அவருக்கு ஆப்பு நிச்சயம்…
by admin - 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரச பாதுகாப்பில் இருந்த விடுதலை புலிகளின் சர்வதேச தலைவர் என அறியப்படும் குமரன் பத்மநாதன் கே பி நாட்டை விட்டு வ்ச்கீப் ஆகிவிட்டதாக  செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இந்த செய்தியை முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உறுதிபடுத்தியுள்ளார்.

இன்று நடந்த ஊடக மாநாட்டில் கருத்துவெளியிட்டுள்ள அவர் இதனை தெரிவித்துள்ளார்.இவரை முன்னதாக இலங்கை போலிசார் கைது செய்திருந்த நிலையில் இவர் மஹிந்த ராஜபக்ஷ அரசின் பாதுகாப்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை புலிகளின் ஐரோப்பாவில்உள்ள வங்கிகளில்  வைப்பில் உள்ள பெறும் தொகையான பணத்தை வெளியே எடுக்க கூடிய அதிகாரம் கே பி இடமே உள்ளது .

இது ஒருபுறம் இருக்க கேபி இதனை மறுத்துள்ளதாகவும் ஊடக செய்திகள் வெளியாகியுள்ளன வரும் தினங்களில் ஜனாதிபதி மைத்ரியின் அமைச்சரவை அமைக்கப்பட்டால் அதில் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்பு அமைச்சு வழங்கப்படும் என தெரிவிக்கபடுகிறது.

கேபி நாட்டில் இருந்தால் அநேகமாக அவருக்கு ஆப்பு நிச்சயம்….


« PREV
NEXT »

No comments