இலங்கையில் முன்னைய அரசாங்கத்தினால் தீர்க்கப்படாது விடப்பட்ட மனித உரிமைப் பிரச்சனைகளை புதிய அரசாங்கம் அவசரமாகத் தீர்க்க வேண்டும் என்று அம்னஸ்டி இண்டர்நேஷனல் என்ற சர்வதேச மனித உரிமைகள் நிறுவனம் கூறியுள்ளது.
இலங்கையின் இறுதிப் போரில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐநாவின் முன்னெடுப்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த ஐநாவின் விசாரணைகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று அம்னஸ்டி இண்டர்நேஷனல் கோரியுள்ளது.
மதச் சிறுபான்மை சமூகங்களின் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது. ஐநாவின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் இதுவரை மறுத்துவந்தது.
சர்வதேசத்துடனான உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Social Buttons