புதிதாக 60 அமைச்சர்கள் பதவியேற்பு புதிதாக தெரிவுசெய்யப்படவுள்ள அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் ஒதுக்கீடுகளில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு இடமில்லை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து அமைச்சர்கள் மற்றும் அமைச்சு ஒதுக்கீடுகளை மேற்கொள்ளும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையிலேயே ஈ.பி.டி.பியினருக்கு அமைச்சரவையில் எந்தவித ஒதுக்கீடும் செய்யப்படவில்லை என அறியமுடிகின்றது. மேலும், அமைச்சரவை அந்தஸ்துள்ள 25 அமைச்சர்கள், 10 அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர்கள் , 25 பிரதி அமைச்சர்கள் என 60 பேர் நாளை அல்லது நாளை மறுதினம் பதவியேற்கவுள்ளனர் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த அமைச்சுக்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் முக்கிய அமைச்சு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
Social Buttons