maps |
உடலில் பச்சை குத்தும் கலாசாரம் உலகில் வேகமாகப் பரவி வருகிறது. விளையாட்டு வீரர்கள், நடிகர்கள், பாடகர்கள் ஆகியோர் தமது உடலில் பச்சை குத்தியுள்ளனர். அவர்களைப் பார்த்து ரசிகர்களும் பச்சை குத்தத் தொடங்கிவிட்டனர்.
கால்பந்து வீரர்களான பெக்கம், நெய்மர், துடுப்பாட்ட வீரர் பீற்றர்சன் ஆகியோர் பச்சை குத்துவதில் அதிக ஆர்வம் உள்ளவர்கள். நடிகைகளான நயன்தாரா, குஷ்பு ஆகியோரும் தமது உடலில் பச்சை குத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
பீற்றர்சன் தனது உடலில் உலகப்படம் வரைந்து அசத்தியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 23 சதங்களும், ஒரு நாள் போட்டியில் 9 சதங்களும் அடித்த பீற்றர்சன் தனது சதங்களை நினைவுபடுத்தும் வகையில் உடலில் பச்சை குத்தியுள்ளார். சதமடித்த மைதானங்களை சிவப்பு மையால் அடையாளப்படுத்தியும் உள்ளார்.
டெஸ்ட் போட்டியில் பீற்றர்சன் சதமடித்த இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்தியதீவுகள், இலங்கை ஒருநாள் போட்டியில் சதமடித்த தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துபாய் ஆகிய நாடுகளை சிவப்பு மையால் அடையாளப்படுத்தியுள்ளர்.
பச்சை குத்துவதில் பிரபல்யமானவரான மக் ஸ்குரில்ஸ் என்பவரே பீற்றர்சனின் உடலில் உலகப்படத்தை பச்சை குத்தியுள்ளார்.
Maps in Body |
Social Buttons