Latest News

January 22, 2015

ஐபிஎல் மேட்ச் பிக்ஸிங்: மெய்யப்பன், குந்தராவுக்கு தொடர்பு!
by Unknown - 0

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் ஐசிசி சேர்மன் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனுக்குத் தொடர்பு இருப்பது நிரூபணமாகியுள்ளதாக சுப்ரீம் கோர்ட் இன்று தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை நிறுவனர் ராஜ் குந்த்ரா மீதான சூதாட்டப் புகாரும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். அதேசமயம், சீனிவாசனுக்கு இதில் தொடர்பில்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சீனிவாசன் மீதான புகார்கள் வெறும் சந்தேகமே என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் பிசிசிஐ பதவி அல்லது ஐபிஎல் அணி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத்தான் சீனிவாசன் வகிக்க முடியும் என்றும் உச்சநீதிமன்றம் அதிரடியாக கூறியுள்ளது.

மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சீனிவாசன் வாங்க வழி வகுத்த பிசிசிஐ சட்ட திருத்தத்தையும் அது ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 

இன்றைய தீர்ப்பில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவின் முக்கிய அம்சங்கள் 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சீனிவாசன் வாங்க வழி வகுத்த பிசிசிஐ சட்ட விதி 6.2.4 ரத்து செய்யப்படுகிறது.

வர்த்தக நோக்கில் பிசிசிஐ அதிகாரிகள் செயல்படுவதை அனுமதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கொட்டு.

 பிசிசிஐ பதவி அல்லது ஐபிஎல் அணி உரிமையாளர் பதவி ஆகியவற்றில் ஒன்றையே சீனிவாசன் தேர்வு செய்ய முடியும் எனவும் உத்தரவு

 பிசிசிஐ நிர்வாகிகள் ஐபிஎல் அணிகளை நிர்வகிக்கவும் தடை பிசிசிஐ தேர்தலில் சீனிவாசன் போட்டியிட முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு.

பிசிசிஐ சட்ட விதிகளை சீர்திருத்தி திருத்த 3 பேர் கொண்ட கமிட்டி அமைப்பு. 

முன்னாள் சுப்ரீ்ம் கோர்ட் நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, அசோக் பான், ஆர்.வி.ரவீந்திரன் 3 பேர் கமிட்டியில் இடம் பெறுவார்கள்

3 நபர் கமிட்டி 6 மாதங்களில் தனது அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்கும் 

3 நபர் கமிட்டியின் பரிந்துரைக்குப் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கதி தெரிய வரும் 

இன்றிலிருந்து 6 வாரங்களுக்குள் பிசிசிஐ தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்த உத்தரவு.

« PREV
NEXT »