இந்தியாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையில் அணுசக்தி தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பெரக் ஒபாமாவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கூட்டு செய்தியாளர் சந்திபொன்றை நடத்தியிருந்தனர்.
ஹத்திராபாத் இல்லத்தில் இடம்பெற்ற குறித்த செய்தியாளர் சந்திப்பில் இரண்டு தலைவர்களும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
நாளை நடைபெறவுள்ள இந்திய குடியரசு தினத்தின் பிரதம விருந்தினராக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கலந்து கொள்ளவுள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இன்று இந்திய தலைநகரை சென்றடைந்தார்.
அமெரிக்க ஜனாதிபதியின் வருகையை ஒட்டி ஜனாதிபதியின் ராஜ்ரபதி பவனில் இடம்பெற்ற மரியாதை அணிவகுப்பின் தளபதியாக பெண் ஒருவர் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக தலைவர் ஒருவருக்கு ராஜ்ட்ரபதி பவனில் இடம்பெற்ற மரியாதை அணிவகுப்பில், முதன் முறையாக பெண் அதிகாரி ஒருவர் கலந்து கொண்டமை நோக்கத்தக்கது.
நாளைய குடியரசு தின நிகழ்வுகளின் போதும் பல பெண் படைத்தளபதிகள் பங்கு கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய விமானப்படையின் விங் கொமாண்டர் தரத்தைக் கொண்ட பூஜா தக்கூர் என்பவரே அணிவகுப்பின் தலைமைப் பொறுப்பை பெற்றிருந்தார்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கு 21 மரியாதை வேட்டுகள் தீர்க்கப்பட்ட நிகழ்வில், இந்திய ஜனாதிபதி பிரனாப் முக்கர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உட்பட மத்திய அரசாங்கத்தின் அமைச்சர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.
மரியாதை அணிவகுப்பு மற்றும் மரியாதை வேட்டுக்களை அடுத்து, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, ராஜ்பத்தில் உள்ள மகாந்மா காந்தியின் நினைவாலயத்திற்கு சென்று தமது மரியாதையினை தெரிவித்ததாகவும் அறிவிக்கப்பட்டள்ளது.
Social Buttons