பெப்ரவரி மாதம் இறுதிப்பகுதியளவில் 100 நாள் வேலைத்திட்டத்திற்கமைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர.
இதேவேளை நாட்டைக் கட்டியெழுப்புதற்குத் தேவைப்படும் பலத்தை அனைத்து அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்புடனான தேசிய அரசாங்கம் அமைப்பதன் மூலமே அடைய முடியும் என குறிப்பிட்ட அவர் அனைத்து கட்சிகளினதும் ஒத்துழைப்பையும் கோரியுள்ளார்.
கடந்த தேர்தலில் பொது வேட்பாளருக்கு வாக்களிக்காதோரும் கணிசமான அளவில் இந்த நாட்டில் இருக்கின்றனர். ஆனால் அனைவருக்கும் பொதுவான வேலைத்திட்டத்திலேயே இவ்வரசாங்கம் இயங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment