ஒரு நாட்டின் விமான நிலையம் என்பது , அங்குவரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு அந்நாட்டைப்பிரதிபலிக்கும் முதல் இடமாக அமையும். ஆனால் அங்கிருந்தே ஊழலும் , பணப்பறிப்பும் தொடங்கும் என்றால் அந்நாட்டைப் பற்றிய அபிப்பிராயமும் மாறிவிடும். அண்மையில் இப்படியானதொரு சம்பவம் நடைபெறுவதைத்தான் பின்வரும் காணொளியில் காணமுடிகிறது.
விமானத்தில் ஏற இருக்கும் பயணிகளது ஆவணங்களும் , உடமைகளும் பரிசோதிக்கப்பட்ட பின்பு கடைசியாக அனைத்து பயணிகளும் இறுதி நுழைவாயிலிலுள்ள கதவுகளினூடே பரிசோதனைக்காக அனுப்பப்படுவர் , அவர்களில் யார்மேலாவது சந்தேகம் வந்துவிட்டால் அவர்களை அதற்கென்று அமைக்கப்பட்ட தனியறையொன்றில் முழு உடல் சோதனைக்குட்படுவர் . இதற்கு குறைந்தது 10 நிமிடமாவது தேவைப்படும் .
அனால் சில பயணிகள் ஒருசில செக்கன்களிலேயே திரும்பிவிடுவர். இது எதனால் என்பது , இக்காணொளியைபார்த்த உடனேயே புலப்படுகிறது . பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் உத்தியோகமானது பணத்தாலேயே முடக்கப்படுகிறது. இதைவிட சிவில் உடையில் இருக்கும் உத்தியோகத்தர்களின் கைகளிலும் பணம் பரிமாறப்படுவதை காணக்கூடியதாக இருக்கிறது .
அடுத்தகட்ட பணப்பறிப்பானது விமானநிலையத்தின் பயணிகள் வெளியேறும் பாதையில் முகவர்களால் நடாத்தப்படுகிறது என்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.
பகுதி 2
பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் அரங்கேறும் பாலியல் சேட்டைகளிற்க்கான ஆதாரத்தை கீழ் காணும் காணொளியில் காணலாம்.
(நன்றி News 1st)
Social Buttons