எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றம் களைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அரச நிர்வாகம் மற்றும் புத்தசாசன அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
அந்த தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்போ ஆட்சிக்கு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இரண்டு வருடங்களுக்கு புதிய அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறினார்.
இதற்கு முந்தைய அரசினால் செயலிழக்கச் செய்யப்பட்ட சுயாதீன ஆணைக்குழுவை மீண்டும் செயற்படுத்துவதற்கும் 100 நாட்களில் எஞ்சியுள்ள 84 நாட்களுக்குள் பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற உள்ளதாகவும் தெரிவித்தார்.
Social Buttons