Latest News

January 02, 2015

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரரை இன்று சந்தித்தார் !
by Unknown - 0

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜோன் ரங்கின் இன்று (02) யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். இன்று காலை யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜோன் ரங்கின் யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்களை சந்தித்து தேர்தல் தொடர்பான நிலைப்பாடுகள் குறித்து  கலந்துரையாடினார்.

இதன் போது வாக்களிப்பு நிலையங்கள் மற்றும்  வாக்கெண்ணும் நிலையங்களுக்கான பாதுகாப்பு, ஆளணி விடயங்கள்,பணிக்கு அமர்த்தப்படும் ஆளணிக்கு வழங்கப்படும் பயிற்சிகள், போக்குவரத்து ஏற்பாடுகள், அரசியல் பிரமுகர்களின் ஒத்துழைப்பு தொடர்பாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் விளக்கமாக கேட்டறிந்த இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் சிறப்பாக நடைபெற தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.  
« PREV
NEXT »